கோபுரம் இந்த வார்த்தை பலருக்கு நினைவு படுத்துவது மஞ்சள் ,குங்குமம் விளம்பரமாக இருக்கலாம் .ஆனால் இந்த வார்த்தையைக் கொண்டு பெரும் ஆராய்ச்சியே நடந்துள்ளது .
"கோபுரம் " இந்த சொல் தமிழ் சொல் தானோ என்பதே முதல் கேள்வி ?
நாம் அனைவரும் ஒரு நொடி யோசிக்காமல் கூறுவது "ஆம் " என்பது மட்டுமே .
ஆனால் உண்மை இது நம் தமிழ் மொழி சேர்ந்த சொல் அல்ல என்பதுதான் .
அது எப்படி சொல்றிங்க ?என்ற கேள்விக்கு பதில் நம் இந்தியர்களின் இலக்கிய நூல்களே .
பிறமொழி நூல்களையும் தமிழ் நூல்களையும் "கோபுரம் " என்ற சொல் பயன்படுத்தப்பட்ட காலத்தின் அடிப்படையில் தமிழ் நூல்களுக்கு முன்பே பிறமொழி நூல்களில் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
"கோபுரம்" என்ற சொல் சமஸ்கிருதம் ,பிராகிருதம்,பைசாசம் போன்ற மொழிகளில் தோன்றி தமிழ்க்கு வந்ததாக கூறுகின்றனர் .
நாம் அறிந்தவரை கோபுரம் எனும் சொல் கோவிலின் நுழைவு வாயிலை குறிக்கும் .ஆனால், சமஸ்கிருத நூலில் "கோ=பசு "வையும் "புரம்=காப்பது "என்றும் கூறுகின்றனர் .
கோபுரம் என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் கூறப்படுகிறது .
"கோபுரம்என்பது பெருவாயிலின் பெயரே
புதவு வாயிற் புகு பெரும் புழையே " (147)
"கோபுர வாயிற்றிண்ணையின் பெயர்
அளிந்த மவ்வழிச் சார் திண்ணை யாகும் ......" (148)
இந்தப்பாடல் கி. பி 9ஆம் நுற்றாண்டு சேர்ந்த திவாகர நிகண்டு என்பதில் குறிப்பிடப்பட்டுள்ளது .
மேலும் பல நூல்களில் இச்சொல்லின் பொருள் மாறுபட்டு உள்ளது .
அவை :கூடம் ,சிகரம்,தொட்டி ,வாரி ,துவாரம் ,வாசல் ... என்று நீள்கிறது .
அட இதெல்லாம் இருக்கட்டும் "கோபுரம்"என்ற சொல் எப்போ தமிழ் மொழியில் பயன்படுத்தப்பட்டது ?என்று கேள்வி உங்களிடம் வந்திருக்கும் .
கி .பி 4 ஆம் நுற்றாண்டில் இயற்றப்பட்டதாக கருதப்படும் "சிலப்பதிகாரம் ,மணிமேகலை "போன்ற நூல்களில் கோபுரம் என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை "வாயில் " என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது .
சங்க தமிழ் நூல்களுக்குபின் இயற்றப்பட்ட பெருங்கதை என்னும் நூலில் நான்காம் காண்டமான 'வத்தவ காண்டத்தில் '''கொற்றங்கொணண்டது" என்னும் பகுதியில் உதயணன் வருடகாறன் முதலியோருக்கு சிறப்பு செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளது .
"வாழிய ...
கோபுரந் தோறும் பூமழை பொழியச்
சேயுயர் மாடத்து வாயில் ....." (23-25) என்றும்
மேலும் நூலின் பல பகுதியில் பயன்படுத்தயுள்ளர் .
இந்த நூலை பதிப்பித்தவர் நம் உ.வே சாமிநாதையர்.இவர் இன் நூல் குணாட்டியர் என்பவரால் பைசாச மொழில் இயற்றப்பட்ட பிருகத்கதா என்னும் நூலின் மொழிபெயர்பே என்று கூறுகிறார் .
மிண்டும் அடுத்த பதிவில் ச(சி)ந்திப்போம் .