வெள்ளி, 2 டிசம்பர், 2016

கேரளாந்தகன் திருவாயில்

மிகப்பெரும் இடைவேளைக்குப் பின் சந்திப்பதில் மகிழ்ச்சி
இன்று பகிரப்போகும்  பதிவு நம் தஞ்சை நுழைவாயல் பற்றி

நானும் தஞ்சைக்கு அடுத்த அடி இன்னொரு கோவிலை பற்றி செய்தி பகிர விரும்புகிறேன் ஆனால் எனக்கு முடிவு என்பது இல்லை என்பதை ஒவ்வொரு முறையும் எனக்கு அறிவுத்துகிறது தஞ்சை என்னும் வியக்கவைக்கும் அதிசயம் .

இடைக்கால சோழர்களால் உருவாக்கப்பட்ட கோவில்களில் முதலிடம் தஞ்சைக்கு தான் கொடுக்கின்றனர் ஆய்வாளர்கள் .தஞ்சை கோபுர நுழைவாயில்களை ஆராயும்போது அதில் அதற்கு முன் எந்த வாயில்களிலும் இல்லாத புதுமைகள் உள்ளன .


முதல் கோபுரம் கேரளாந்தகன் திருவாயில் இந்த கோபுரத்தில் கீீழ்நிலையில் 
சிற்பங்கள் இடம் பெறவில்லை என்றாலும் முதற்தளத்தில் வடக்கு மற்றும் தென் புறத்தில் தட்சிணாமூர்த்தி ,பிரம்மன் ஆகிய சிற்பங்கள் அமைந்துள்ளது .
இதில் என்ன புதுமை என்று கேட்கின்றீர் அனைத்து கோவில்களில் உள்ளது போல் தட்சிணாமூர்த்தி உருவம் அமைந்துள்ளது ஆனால் பிரம்மன் உருவ அமைப்பு மாறுபட்டு உள்ளது .

குடையின் கீழ் சடா மகுடராய் தாடி,மீசை உடன் நான்கு தலைகளுடன் ஒரு காலை  மடித்தும் மறுகாலை தொங்கவிட்ட நிலையிலும் உள்ளார் வலது  மேற்கரத்தில் இஸ்ருவம்,இஸ்ருக் எனும் வேள்விக் கரண்டிகளும் ,கீழ் புறத்தில் அக்க மாலையும் ,இடது புறத்தில் மேற்கரத்தில் ஜலகெண்டியும் ,கீீழ்கரம்  சுவடிபிடித்த நிலையில் உள்ளார் .

இதுல என்னம்மா இருக்கு அப்படின்னு கேட்கின்றிரோ முற்கால ,பிற்கால சோழர் கோவில்களில் உள்ள பிரம்மன் தாடி ,மீசை இல்லாமலும் கையில் வேள்வி கரண்டிகள் இல்லாமலும் காட்சி அளிக்கின்றனர் .
இது தான் புதுமை இராஜரஜனை தொடர்ந்து இராஜேந்திர சோழன் அமைத்த கங்கை கொண்ட சோளீசுரம் கோவிலிலும் இரு தேவியர் சாவித்திரி ,சரஸ்வதி பக்கம் நின்ற கோலத்தில் வேள்விக் கரண்டியும் ,தர்ப்பை புல்லும்  உடையவராய் ,தாடி ,மீசை உடன் உள்ளார் .

முற்கால ,பிற்கால சோழர் சிற்ப மரபில் காணப்படாத இப்புது வடிவம் தஞ்சை கோபுரத்தில் எவ்வாறு இடம் பெற்றது என்ற கேள்விக்கு பதிலாக ஆராய்ச்சியாளர்கள் விளக்குவது இக்கலை மரபு சோழர்களின் குருமார்களாக இருந்த லகுளீசபாசுபத மர்கத்தினரால் அறிமுகமான ஒரு மரபு .
சர்வசிவ பண்டிதர் ,ஈஸ்வர சிவபண்டிதர் போன்ற ராஜாகுருமார்கள் ஆர்யதேசம் ,கௌடதேசம் போன்ற வடதேசம் இருந்து வந்தவர்கள் .இச்செய்தி தஞ்சை கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது .


வடஇந்திய பகுதிகளில் மத்தியகால சிற்பங்களில் பிரமன் வயோதிகராகவும் ,வேல்விக்குரியவராகவும் ,தாடி ,மீசை உடன் காணப்படுகிறது.



மற்றவர் மரபையும் தன் மரபு  போல் ஏற்று அதை தான் நிறுவிய கோவிலின் முதல் நுழைவாயிலில் அதை பதிவிட்டு தன் தலைமுறைக்கும்  மற்றவர் மரபை மதித்து நடக்க கற்றுகொடுதவன் நம் இராஜராஜ சோழன் என்பதில் சந்தேகமில்லை . 

அடுத்த வாயிலில் உள்ள புராண கதைகளுடன் அடுத்த பதிவில் 
ச(சி)ந்திப்போம் ....
                                                                

சனி, 18 ஜூன், 2016

கோபுரம்

கோபுரம் இந்த வார்த்தை பலருக்கு நினைவு படுத்துவது மஞ்சள் ,குங்குமம் விளம்பரமாக இருக்கலாம் .ஆனால் இந்த வார்த்தையைக் கொண்டு பெரும் ஆராய்ச்சியே நடந்துள்ளது .
"கோபுரம் " இந்த சொல் தமிழ் சொல் தானோ என்பதே முதல் கேள்வி ?
நாம் அனைவரும் ஒரு நொடி யோசிக்காமல் கூறுவது "ஆம் " என்பது மட்டுமே .
ஆனால் உண்மை இது நம் தமிழ் மொழி சேர்ந்த சொல் அல்ல என்பதுதான் .
அது எப்படி சொல்றிங்க ?என்ற கேள்விக்கு பதில் நம் இந்தியர்களின் இலக்கிய நூல்களே .

பிறமொழி நூல்களையும் தமிழ் நூல்களையும் "கோபுரம் " என்ற சொல் பயன்படுத்தப்பட்ட காலத்தின் அடிப்படையில் தமிழ் நூல்களுக்கு முன்பே பிறமொழி நூல்களில் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

"கோபுரம்" என்ற சொல் சமஸ்கிருதம் ,பிராகிருதம்,பைசாசம் போன்ற மொழிகளில் தோன்றி தமிழ்க்கு வந்ததாக கூறுகின்றனர் .
நாம் அறிந்தவரை கோபுரம் எனும் சொல் கோவிலின் நுழைவு வாயிலை குறிக்கும் .ஆனால், சமஸ்கிருத நூலில் "கோ=பசு "வையும் "புரம்=காப்பது "என்றும் கூறுகின்றனர் .

கோபுரம் என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் கூறப்படுகிறது .
"கோபுரம்என்பது  பெருவாயிலின் பெயரே 
புதவு வாயிற் புகு பெரும் புழையே "   (147)
"கோபுர வாயிற்றிண்ணையின் பெயர் 
அளிந்த மவ்வழிச் சார் திண்ணை யாகும் ......"  (148) 
இந்தப்பாடல் கி. பி 9ஆம் நுற்றாண்டு சேர்ந்த திவாகர நிகண்டு என்பதில் குறிப்பிடப்பட்டுள்ளது .

மேலும் பல நூல்களில் இச்சொல்லின் பொருள் மாறுபட்டு உள்ளது .
அவை :கூடம் ,சிகரம்,தொட்டி ,வாரி ,துவாரம் ,வாசல் ... என்று நீள்கிறது .
அட இதெல்லாம் இருக்கட்டும் "கோபுரம்"என்ற சொல் எப்போ தமிழ் மொழியில் பயன்படுத்தப்பட்டது ?என்று கேள்வி உங்களிடம் வந்திருக்கும் .

கி .பி 4 ஆம் நுற்றாண்டில் இயற்றப்பட்டதாக கருதப்படும் "சிலப்பதிகாரம் ,மணிமேகலை  "போன்ற நூல்களில் கோபுரம் என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை "வாயில் "  என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது .


சங்க தமிழ் நூல்களுக்குபின் இயற்றப்பட்ட பெருங்கதை என்னும் நூலில் நான்காம்  காண்டமான 'வத்தவ காண்டத்தில் '''கொற்றங்கொணண்டது" என்னும் பகுதியில் உதயணன் வருடகாறன் முதலியோருக்கு சிறப்பு செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளது .

"வாழிய ...
கோபுரந் தோறும் பூமழை பொழியச் 
சேயுயர் மாடத்து வாயில் ....."       (23-25) என்றும் 
மேலும் நூலின் பல பகுதியில் பயன்படுத்தயுள்ளர் .

இந்த நூலை பதிப்பித்தவர் நம் உ.வே சாமிநாதையர்.இவர் இன் நூல்   குணாட்டியர் என்பவரால் பைசாச மொழில் இயற்றப்பட்ட பிருகத்கதா  என்னும் நூலின்  மொழிபெயர்பே  என்று கூறுகிறார் .


மிண்டும் அடுத்த பதிவில் ச(சி)ந்திப்போம் .


வெள்ளி, 8 ஏப்ரல், 2016

தஞ்சை அரண்மனை


தற்போது தஞ்சையில் அழகு கொஞ்சும்  அரண்மனையின் பெரும்பகுதி நாயக்கர்களால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த அரண்மனை செவ்வப்ப நாயக்கரால் துவங்கப்பட்டு இரகுநாத நாயக்கர் மற்றும் விசயராகவா நாயக்கர்கள் கைவண்ணத்தில் முடிக்கப்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன .

இரகுனாதர் காலத்தில் " விசய விசாலம் என்றும் இரகுநாத விலாசம்" என்றும்  விசயராகவன் காலத்தில் " விசயராகவா விலாசம் "என்றும் அரண்மனை அழைக்கப்பட்டதாம்.

அன்று தஞ்சையை அலங்கரித்த சோழர் கால அரண்மனை பற்றிய சரியான தகவல்கள் கல்வெட்டுகள் ,செப்பேடுகள் ஏதும் கிடைக்கவில்லை என்று அறியப்படுகிறது .

ஆனால் இவற்றையும் தாண்டி நம் புலவர்களின் பாடல்கள் சான்றாக நிற்கின்றது .

கருவூறார் பாடலில் 

"இடைகெழு மாடத்து இஞ்சிசூழ் தஞ்சை " என்றும் 

அருணகிரியார் பாடிய பாடலில் 

" பொன் மாளிகைத் தஞ்சை மாநகர் " என்றும் 

அவர்கள் பாடல் வழியாக தஞ்சையில் மாட மாளிகைகள் அலங்கரிக்கப்பட்டது என்று தெளிவாகிறது மேலும் சாகித்ய ரத்நகரம் ,ரகுநாத நாயக்கப் யூதயமு ,மன்னாருதாச விலாசம் போன்ற நூல்களிலும் அரண்மனைப்பற்றி கூறப்பட்டுள்ளது  .

மேலும் தற்போது உள்ள அரண்மனை மராட்டியர் காலத்தில் அவர்களின் கட்டிடகலையின்படி நுணுக்கமான கலைவன்ணங்கள் இடம் பெற்றுள்ளதாம் . இந்த அரண்மனை சுமார் 400 ஆண்டுகள் முன்பு கட்டப்பட்டதாக கூறப்பட்டதாலும் இதில் 75% அழிந்துவிட்டதாம் 

 தஞ்சை அரண்மனை வளாகம் 110 ஏக்கரில் அமைந்துள்ளது .
இவ்வளாகம் முக்கியமாக நான்கு கட்டிடங்களை தாங்கி உள்ளது.

அவை : மணிமண்டபம் 
                 ஆயுத சேமிப்பு  மாளிகை
                  தர்பார் மண்டபம்  
                  நீதிமன்றம்


மணிமண்டபம் 

 மணிமண்டபம் 11 மாடிகள் கொண்டதாகும் ஆனால் தற்பொழுது 7 மாடிகள் 34.8 மீட்டர்  மட்டுமே உள்ளது .இது மேலும் .
ஒவ்வொரு தளத்திலும் 4 புறமும் வளைந்த சாளரங்கள் காணப்படுகிறது ஆதலால் ,மக்கள் இந்த மண்டபத்தை தொள்ளக்காது மண்டபம் 
என்றும் அழைக்கப்படுகிறது. 
இந்த மண்டபம் கண்காணிப்பு மண்டபமாக பயன்படுத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது .


ஆயுத சேமிப்பு மாளிகை 

ஆயுத மாளிகை கோபுர வடிவில் உள்ளது இதில் அமைந்துள்ள படிகள் மிகவும் சிக்கலான அமைப்புடன் காணப்படுகிறது .




தர்பார் மண்டபம் 

தஞ்சையை ஆட்சி செய்யும் அரசர்கள் அமர்ந்து ஆட்சிபுரியும் மண்டபம் தர்பார் மண்டபமாகும் .பல வண்ணங்களில் தீட்டப்பட்ட ஓவியங்கள் இந்த மண்டபத்தை அலங்கரிக்கின்றன .இந்த மண்டபம் முன் ஒரு மைதானமும் அமைந்துள்ளது .


 
 நீதிமன்றம்

இந்த மண்டபம் மேலும் ஜார்ஜவா மாளிகை என்றும் ,சதர் மாளிகை என்றும் அழைக்கப்படுகிறது .சதர் என்ற சொல்லுக்கு பாரசீக மொழியில் நீதிமன்றம் என்று பொருள் ஆகும் .இந்த மண்டபம் 7 மாடிகள் இருந்ததாக கூறப்படுகிறது ஆனால் இப்பொழுது 5 மாடிகள் மட்டுமே உள்ளது .