தற்போது தஞ்சையில் அழகு கொஞ்சும் அரண்மனையின் பெரும்பகுதி நாயக்கர்களால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த அரண்மனை செவ்வப்ப நாயக்கரால் துவங்கப்பட்டு இரகுநாத நாயக்கர் மற்றும் விசயராகவா நாயக்கர்கள் கைவண்ணத்தில் முடிக்கப்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன .
இரகுனாதர் காலத்தில் " விசய விசாலம் என்றும் இரகுநாத விலாசம்" என்றும் விசயராகவன் காலத்தில் " விசயராகவா விலாசம் "என்றும் அரண்மனை அழைக்கப்பட்டதாம்.
அன்று தஞ்சையை அலங்கரித்த சோழர் கால அரண்மனை பற்றிய சரியான தகவல்கள் கல்வெட்டுகள் ,செப்பேடுகள் ஏதும் கிடைக்கவில்லை என்று அறியப்படுகிறது .
ஆனால் இவற்றையும் தாண்டி நம் புலவர்களின் பாடல்கள் சான்றாக நிற்கின்றது .
கருவூறார் பாடலில்
"இடைகெழு மாடத்து இஞ்சிசூழ் தஞ்சை " என்றும்
அருணகிரியார் பாடிய பாடலில்
" பொன் மாளிகைத் தஞ்சை மாநகர் " என்றும்
அவர்கள் பாடல் வழியாக தஞ்சையில் மாட மாளிகைகள் அலங்கரிக்கப்பட்டது என்று தெளிவாகிறது மேலும் சாகித்ய ரத்நகரம் ,ரகுநாத நாயக்கப் யூதயமு ,மன்னாருதாச விலாசம் போன்ற நூல்களிலும் அரண்மனைப்பற்றி கூறப்பட்டுள்ளது .
மேலும் தற்போது உள்ள அரண்மனை மராட்டியர் காலத்தில் அவர்களின் கட்டிடகலையின்படி நுணுக்கமான கலைவன்ணங்கள் இடம் பெற்றுள்ளதாம் . இந்த அரண்மனை சுமார் 400 ஆண்டுகள் முன்பு கட்டப்பட்டதாக கூறப்பட்டதாலும் இதில் 75% அழிந்துவிட்டதாம்
தஞ்சை அரண்மனை வளாகம் 110 ஏக்கரில் அமைந்துள்ளது .
இவ்வளாகம் முக்கியமாக நான்கு கட்டிடங்களை தாங்கி உள்ளது.
அவை : மணிமண்டபம்
ஆயுத சேமிப்பு மாளிகை
தர்பார் மண்டபம்
நீதிமன்றம்
மணிமண்டபம்
மணிமண்டபம் 11 மாடிகள் கொண்டதாகும் ஆனால் தற்பொழுது 7 மாடிகள் 34.8 மீட்டர் மட்டுமே உள்ளது .இது மேலும் .
ஒவ்வொரு தளத்திலும் 4 புறமும் வளைந்த சாளரங்கள் காணப்படுகிறது ஆதலால் ,மக்கள் இந்த மண்டபத்தை தொள்ளக்காது மண்டபம்
என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த மண்டபம் கண்காணிப்பு மண்டபமாக பயன்படுத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது .
ஆயுத சேமிப்பு மாளிகை
ஆயுத மாளிகை கோபுர வடிவில் உள்ளது இதில் அமைந்துள்ள படிகள் மிகவும் சிக்கலான அமைப்புடன் காணப்படுகிறது .
தர்பார் மண்டபம்
தஞ்சையை ஆட்சி செய்யும் அரசர்கள் அமர்ந்து ஆட்சிபுரியும் மண்டபம் தர்பார் மண்டபமாகும் .பல வண்ணங்களில் தீட்டப்பட்ட ஓவியங்கள் இந்த மண்டபத்தை அலங்கரிக்கின்றன .இந்த மண்டபம் முன் ஒரு மைதானமும் அமைந்துள்ளது .
நீதிமன்றம்
இந்த மண்டபம் மேலும் ஜார்ஜவா மாளிகை என்றும் ,சதர் மாளிகை என்றும் அழைக்கப்படுகிறது .சதர் என்ற சொல்லுக்கு பாரசீக மொழியில் நீதிமன்றம் என்று பொருள் ஆகும் .இந்த மண்டபம் 7 மாடிகள் இருந்ததாக கூறப்படுகிறது ஆனால் இப்பொழுது 5 மாடிகள் மட்டுமே உள்ளது .

