வியாழன், 14 மே, 2015

தஞ்சையின் அளவுகோல் ......

தஞ்சை குறைவில்லாத புதையலின் தேசம் 

அளவில்லாத அழகின் இருப்பிடமான தஞ்சை பெரிய கோவிலின் அளவுகோல் பற்றி இன்று தெரிந்துகொள்வோம் .....

தஞ்சை பெயர்  காரணத்தில் குறிப்பிட்டது போல தஞ்சை என்றால் "குளிர்ந்த வயல்கள் நிறைந்த பகுதி ". நெல்மகள் நடனமாடிய தஞ்சையில் அவளையே அளவுகோளாக வைத்து கட்டியது தான் நம் தஞ்சை பிரகதீஸ்வரர்(பெரிய) கோவில் .

விரல் என்னும் அளவுகோல் தான் பயன்படுத்த பட்டுள்ளது .

விரல் அப்படி என்றால் ? 

ஒரு விரல் என்பது 8 நெல் கதிரை அகல வாட்டில் வைத்தால் கிடைக்கும் அளவு அதாவது 33 மில்லி மீட்டர் ( 33 mm ) . 



பத்து விரல்கள் சேர்ந்த அளவு அலகு என்று அழைக்கப்பட்டுள்ளது .
௦.33 மீட்டர் (௦.33 m) .

இருபத்துநான்கு விரல்கள் சேர்ந்த அளவு முழம் என்று அழைக்கப்பட்டுள்ளது .

கோவிலின் அளவுகள் :

பல நூல்களில் பல முரண்பட்ட அளவுகள் குறிப்பிட பட்டுள்ளது அவை 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை தஞ்சை விமானத்தின் அளவை குறிப்பிடுகின்றன .

ஆனால் அவர்கள் பயன்படுத்திய அளவுகோலின் படி பார்க்கையில் 
விமானத்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள் ஆக இருந்திருக்க வேண்டும் . அப்படியெனில்  59.40 மீட்டர் .

இதன்படி சிவலிங்கத்தின் உயரம் 12 அலகுகள் .அதாவது சரியாக சிவலிங்கத்தை விட விமானம் 15 மடங்கு உயரம் என நிர்ணயிக்கப் பட்டிருக்க வேண்டும் .



மேலும் நம் தஞ்சை பெரியகோவில் கருவறையின் இரு தளங்கள் ,விமானத்தின் 13 தளங்கள் சேர்த்து மொத்தம் 15 தளங்கள் கொண்டது என்பதுகுறிப்பிடத்தக்கது.





கருவறையின் வெளிச்சுவர் தூண்களின் அகலம்  10 விரல்கள் அதாவது
1 அலகு ஆகும் . இதன் அடிப்படையில்  கருவறை 24 அலகுகள் கொண்ட சதுரமாகும் .

மேலும்  கருவறையின் உட்சுவர் 48 அலகுகளும் ,வெளிச்சுவர் 72 அலகுகளும் கொண்ட சதுரமாகும் .

விமானத்தின் அடிப்பகுதி ( உபானா ) 90 அலகுகள் .
இதன் அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் (36 m) கொண்ட  சதுரமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது . ஆனால் உறுதிசெய்யப்படவில்லை .

இந்த அளவுகோல்கள் நம் தஞ்சையின் அளவை மட்டும் அல்ல நம் தமிழகத்தின் செழுமை அப்பொழுது எந்த அளவு இருந்திருக்கிறது என்பதையும்  தெளிவாகிறது .

வியாழன், 23 ஏப்ரல், 2015

நம் தமிழனின் வியக்கும் தொழில்நுட்பங்கள்

இன்றைய தொழில்நுட்பங்கள் தொடாத தூரத்தை ஆயிரம் ஆண்டுகள் முன் நம் தமிழர்கள் தொட்டுவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும் .


தஞ்சையில் உள்ள வியக்கும் அதிசயங்களில் நம் கண்ணில் இருந்து மறையும் ஒன்று .....

கோவிலின் கோபுரத்தையும் ,விமானத்தையும் அதிசயத்து பார்க்கும் அந்த நேரத்தில் இந்த வியக்கும் வேலைப்பாடு நம் கண்களில் இருந்து  மறைவதில் வியப்பு இல்லை .






















மேலும் நெருங்கி செல்வோம் இந்த வேலைப்பாட்டின் ஆழத்தை அறிய .இந்த படத்தைக் காணும் போது பூக்கள் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளதாக தோன்றுகிறது . 
ஆனால் இந்த அமைப்பினும் இருக்கும் நுண்ணிய வேலைப்பாடுகள் நம் கண்களுக்கு புலப்படுவது கடினமே. இந்த வேலைப்பாடு விமானத்தை தாங்கி உள்ள கோபுரத்தின் கிழ்ப் பகுதியில் அமைந்துள்ளது .


 .

வரிசையாக பூக்கள்இணைந்து இருக்கும்படி இந்த வேலைப்பாடுகளின் இடையில், அதாவது  இரண்டு பூக்களின் இதழ்கள் ஒரு புள்ளியில் இணையும் இடத்தில் ஒரு துளை அமைக்கப்பட்டுள்ளது .

இந்த துளைகள் 3மி.மீ கும் குறைவான விட்டம்  மட்டுமே உடையது .
இந்த துளைகளின் உள் நாம் சிறு இலையின் காம்பை மட்டுமே செலுத்த முடிகிறது .அதனுள் ஏன் நம் எழுதுகோல் கூட நுழைக்க முடியாது அவ்வளவு நுணுக்கமானது .




இந்த துளைகளில் பொதிந்துள்ள ஆச்சரியம் யாதெனில் . நம் தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டுள்ளது ,உலகில் கடினமான பொருள்களுள் ஒன்றாக கருதப்படும் சிவப்பு  கிரானைட்  டினால்(red granite ) ஆனது .

மேலும் இவைகளில் துளையிடுவது மிகவும் கடினமான ஒன்று . இன்றைய தொழில்நுட்பத்தில் இவ்வகை நுண்ணிய துளைகள் அமைக்க வைர முனையை பயன்படுத்துகின்றனர் ( diamond tip drilling technique ).







மேலும் இதனுள் அமைந்துள்ள மற்றொரு வியப்பு இந்த துளைகள் நேரானவை அல்ல ( not a  straight drilling ) இவை குறிப்பிட்ட கோணத்தில் அமைந்துள்ளது என்பதை நாம் மேல் குறிப்பிட்டுள்ள புகைப்படத்தின் மூலமாக அறியலாம் .
.


அதாவது செங்கோணமாக அமைந்துள்ளது (90 degree ) இப்படிப்பட்ட மிக நுணுக்கமான துளையிடும் தொழில்நுட்பங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்து அதை கண்டறிய முடியாத இடத்தில் ஒளித்து வைத்துள்ளான் நம் தமிழன் .....

சனி, 18 ஏப்ரல், 2015

தஞ்சை அகழியை சுற்றி ஒரு பார்வை .....


தஞ்சை பற்றி என்று சொல்லிவிட்டு  இன்னும் தஞ்சை பெரியகோவில் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது இல்லையா.  நம் தஞ்சை கோவிலில் நாம்  பார்க்க போகும் முதல் இடம் ,தஞ்சை கோவிலின் வெளிப்புறத்தில்  முதலில் கண்ணுக்கு தென்படடுகிற தஞ்சை பெரிய கோவில் சுற்றி அமைக்கப்பட்டுள்ள அகழி . 


ஆ) தஞ்சை அகழி


தஞ்சை கோவில் அகழி பற்றி  அறிவதற்கு  முன் நம் தமிழன் கட்டி காத்த
நீர் நிலைகள் பற்றி  தெரிந்துகொள்வோம் .

தமிழன் கட்டி காத்த 47 நீர்நிலைகள் 


1) அகழி (Moat) - கோட்டையின் வெளிப்புறம் அமைக்கப்பட்ட நீர் அரண் .
2) அருவி (water fall)- மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது .
3) ஆழிக்கிணறு (well in sea-shore) -கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு 
4) ஆறு (river)- பெருகி ஓடும் நதி .
5) இலஞ்சி (reservoir for drinking and other purposes )- பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம் 
6) உறை கிணறு (ring well) -மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு .
7) ஊருணி (Drinking water tank) -மக்கள் பருகும் நீர் நிலை .
8) ஊற்று (spring) - பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது .
9) ஏரி(irrigation tank) - வேளாண்மை பாசன நீர் தேக்கம் .
10) ஓடை (brook) -அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் -வாய்கால் வழி ஓடும் நீர் .
11) கட்டுக் கிணறு (built-in-well) - சரளை நிலத்தில் வெட்டி ,கல் ,செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு .
12) கடல் (sea) - சமுத்திரம் 
13) கம்மாய் (irrigation tank)- பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கிய பெயர் .
14)கலிங்கு (sluice with many ventures ) -ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடையாமல் இருப்பதற்கு முன் எச்சரிகையாக கற்களால் உறுதியாக்கப்பட்டு பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு 
15) கால் (channel) - நீரோடும் வழி .
16) கால்வாய்(supply channel to a tank) - ஏரி, குளம் ஊருணி இவற்றிற்கு நீர் ஊட்டும் வழி .
17) குட்டம் (large pond) - பெருங் குட்டை .
18) குட்டை (small pond) -சிறிய குட்டம் .மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை 19) குண்டம் (small pool) -சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை .
20)குண்டு (pool)-குளிபதற்கு கேற்ற ஒரு சிறு குளம் .
21) குமிழி (rock cut well)- நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு .
22)குமிழி ஊற்று(artesian fountain) -அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று .
23) குளம் (bathing tank)- ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப் பயன்படும் நீர் நிலை
24 ) கூவம் (abnormal well) -ஒரு ஒழுங்கில் அமையாதா கிணறு .
25) கூவல் (hollow)-ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம் .
26) வாளி (stream)- ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரம்பி மருகால்வழி அதிகம் நீர் வெளிச் செல்லுமாறு அமைத்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை .
27) கேணி(large well) - ஆழமும் ,அகலமும் உள்ள ஒரு பெருங்கிணறு
28) சிறை (reservoir) - தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை .
29) சுனை (mountain pool) - மலையிடத்து இயல்பாய் அமைந்த நீர் நிலை .
30) சேங்கை (tank with duck weed) - பாசிக்கொடி மண்டிய குளம் .
31) தடம் (beautifully constructed bathing tank) -அழகாக நாற்புறமும் கட்டப்பட்ட குளம் .
32) தளிக்குளம் (tank surrounding a temple) - கோவிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற நீர் நிலை .
33) தாங்கல் (irrigation tank) - இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும் .
34) திருக்குளம் (temple tank) - கோவிலின் அருகே அமைந்த நீரோடும் குளம் 
35) தெப்பக்குளம் (temple tank with inside pathway along parapet wall ) - ஆளோடஉடன் கூடிய தெப்பம் சுற்றி வரும் குளம் .
36) தொடு கிணறு (dig well) - ஆற்றில் அவ்வப்பொழுது மணலைத்தொண்டி நீர் கொள்ளும் இடம் .
37) நடை கேணி (large well with steps on one side) - இறங்கி செல்லும் படிக்கட்டமைப்பு  பெருங்கிணறு .
38)நீராவி(bigger tank center mantapam) - மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம் .ஆவி என்றும் கூறப்படும்.
39 ) பிள்ளக்கிணறு (well in middle of a tank) - குளம்,ஏரிக்கு நடுவில் அமைந்த கிணறு .
40) பொங்கு கிணறு (well with bubbling spring)- ஊர்ருக்கால் கொப்பளித்துக் கொண்டே இருக்கும் கிணறு .
41) பொய்கை (lake) -தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்து நீண்டதொரு நீர் நிலை .
42) மடு(deep place in a river)- ஆற்றின் இடையில் உள்ள அபாயமான  பள்ளம் .
43) மடை (small sluice with single venture ) - ஒரு கண்ணே உள்ள சிறு மதகு .
44) மதகு (sluice with many ventures) - பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ள ,பல கண்ணுள்ள ஏரி 
நீர் வெளிப்படும் மடை 
45) மறு கால் (surplus water channel) - அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.
46) வலயம் (round tank) - வட்டமாய் அமைந்த குளம் .
47) வாய்க்கால் (small water course) - ஏரி முதலிய நீர் நிலைகள் .


இப்பொழுது அனைவருக்கும்  கொஞ்சம் தலை சுற்றி இருக்கும் 

அதனால் மீண்டும் நம் தஞ்சைக்கு செல்வோம் 

அகழிகள் மன்னர்கள் வசித்த இடத்தை பாதுகாக்கவும் ,நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கவும் பயன்படுத்தபட்டன .
தஞ்சை கோவில் கி.பி 1010 -ம் ஆண்டு ராஜா ராஜா சோழனால் கட்டி முடிக்கப்பட்டது .கோவிலை சுற்றி 3 கி. மி  தூரம் இந்த அகழி அமைந்துள்ளது .மேலும் நாம் முன் பார்த்த பெரிய கோட்டையை சுற்றியும் அகழி அதற்கு பின் வந்த நாயக்க மன்னர்களால் 400 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டுள்ளது .
இன்று வரை நம் தஞ்சை கோவில் நிமிர்ந்து நிற்க இந்த அகழியும் முக்கிய காரணம் ஏனெனில் அன்று இந்த அகழியில் முதலைகள் இருந்ததாகவும் 
அவை அன்னியர்களிடம் இருந்து கோவிலை பாதுகாத்ததாகவும் கூறப்படுகிறது.

தஞ்சை கோவில் அகழி  படங்கள் :



தஞ்சை அகழியின் நிலை இன்று  :


சிறிய கோட்டை அகழி மதில் இடிந்து விழுந்த பகுதி :

சிறிய கோட்டை அகழி சில மாதங்கள் முன் இடிந்து விழுந்தது பின் இந்த பகுதி தற்பொழுது மாநகராட்சி இடம் இருந்து இந்திய தொல்பொருள் ஆராச்சி அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டு சீரமைப்பு பணிகள்  நடைபெற்று வருகிறது .


வெள்ளி, 17 ஏப்ரல், 2015

தஞ்சை கோட்டையை சுற்றி ஒரு பார்வை .......

 .

நம் தமிழன் கோட்டைகளும் ,கோவில்களும் இன்றும் ஏன் என்றும் உலக அதிசயங்கள் தான் .விடை தெரியாத புதிர்கள் அவை , இன்னும் கண்டுபிடிக்க முடியாத சுரங்க அமைப்புகள், கண்டறியப்படாத பொக்கிஷங்கள் ,புரியாத கட்டமைப்புகள் என பட்டியல் நீண்டு கொண்டு தான் போகிறது .

நாம் இப்பொழுது தஞ்சை கோட்டையை நோக்கி செல்வோம் .


ஆ )தஞ்சை கோட்டை :


வரலாறு சிறப்பு மிக்க கோட்டைகளுள் தஞ்சையும் ஒன்று .
இக் கோட்டையின் சிறப்புகள் பல நூல்களில் குறிப்பிட பட்டுள்ளது 

அவற்றில் சில :


திருமங்கயாழ்வார் பாடல்களில் 


" வம்புலான் சோலை மாமதில் தஞ்சை " என்றும் 

கருவூறார் திருவிசைப்பாவில் 


"மறிதிரை வடவாற் றிடுபுனல் மதிகில்வாழ் முதலை 

ஏற்றிநீர்க் கிடங்கில் இஞ்சிசூழு தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே "

வடவாற்று நீர் தஞ்சை கோட்டைக்கு வந்ததை கருவூர் தேவர் குறிப்பிடுகிறார். 



தஞ்சை நகரக் கோட்டை 530 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது .
இக் கோட்டையை கருடக்கொடி என்றும் அழைப்பர் ஏனெனில் இக் கோட்டையின் அமைப்பு கருடன் வடிவில் அமைக்கப்பட்டுள்ளத்தால் இப்பெயர் வழங்கப்படுகிறது .இக்கோட்டையில் யாருக்கும் பாம்பு கடித்தால்கூட மரணம் அடைவது இல்லை என்ற கதைகளும் சொல்லப்படுகிறது. மேலும் இக் கோட்டையை சுற்றி 8 காவலர் கோபுரங்கள் அமைந்துள்ளன .


 ராஜராஜ சோழன் தஞ்சை நகரை இரண்டாக  உள்ளாலை என்றும் 
city ) மற்றும் புறம்படி என்றும் (suburban) பிரித்து அழகான நகரமைப்பை வடிவமைத்தார் . உள்ளாலை கோட்டைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது .


தஞ்சைக் கோட்டை சிறிய கோட்டை ,பெரிய கோட்டை என இரண்டு 
பகுதிகளைக் கொண்டது . "சிறிய கோட்டை " என்பது  "பெரிய கோட்டைக்கு "காலத்தால் முந்தியது ஆகும் . இது பெரிய கோட்டையின் தென்மேற்கே அமைந்துள்ளது. இக் கோட்டை சிவகங்காகோட்டை
என்றும் அழைக்கபடுகிறது . 


இச்சிறிய கோட்டையில் தான் நம் புகழ்மிக்க ,உலக அறிவியல் இன்று வரை அதிசயத்து நிற்கும் ,விடை கண்டுபிடிக்க முடியாத அதிசங்கள் நிறைந்து இன்று வரை தமிழனை நிமிரிந்து நிற்க வைத்த நம் தஞ்சை பெரிய கோவில் அமைந்துள்ளது .


இக்கோட்டை செவ்வப்ப நாயக்கர் கட்டியது ,இதன் பரப்பளவு 36 ஏக்கர் ஆகும் .இக்கோட்டையில் வடக்கில்கிறிஸ்துவஆலயம், சிவகங்கை பூங்கா ,குளம் ஆகியவை அமைந்துள்ளது . 1779 இல் ஸ்வார்ட்ஸ் கட்டிய கிறிஸ்துவ ஆலயமும் ,1871 -72 இல் நகராட்சியால் சிவகங்கைப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது .இப் பூங்காவில் பலவகை விலங்குகள் மற்றும் பறவைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன . பூங்காவின் தெற்கே பெரிய கோவில் அமைந்துள்ளது .


சிறிய கோட்டையை அடுத்து தஞ்சை நகரைச் சுற்றிப் பெரிய கோட்டை அமைந்துள்ளது . இப்பெரிய கோட்டையின் வடக்கு ,மேற்கு மற்றும் வடகிழக்குப் பகுதியில் கோட்டையின் எஞ்சிய பகுதியும், அகழியும் இன்றும் காணப்படுகிறது .கோட்டையின் தெற்குப்பகுதி முற்றிலும் அழிந்துள்ளது .அகழி மட்டும் நீரால் நிரப்பப்பட்டுள்ளது .


தஞ்சை கோட்டை :

தஞ்சை கோட்டை வரைப்படம் :








வியாழன், 16 ஏப்ரல், 2015

தேடலின் முதல் அடி தஞ்சையை நோக்கி ......

தமிழனின் வரலாறு புதைந்து போனது என்பதை விட புதைக்க பட்டது என்று சொல்லும் நேரத்தில் ,நம் தமிழனின் புதைந்துபோன வரலாற்றை மறுபடியும் முடிந்த வரை வெளியில் கொண்டு வரும் எனது சிறு முயற்சி .....

               

                          1. தஞ்சை 


அ) பெயர் காரணங்கள் :


தஞ்சை எட்டாம் நுற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஒரு நகரமாகும் .அப்போது இப்பகுதியை ஆண்ட "தனஞ்சய முத்தரையரின் " பெயரையே இந் நகரம் பெயராக பெற்றது என்றும் தனஞ்சய ஊர் என்பது மருவி தற்போது தஞ்சாவூர் என்று அழைகப்படுவதாக கூறப்படுகிறது.


இது மட்டும் இல்லாமல் பல காரணங்கள் சொல்லபடுகின்றன ,
தஞ்சை வயல் நிறைந்த பசுமையான பகுதி என்பதால் அதனை குறிக்கும் வகையில் இப் பெயர் பெற்றிருக்க கூடும் என்றும் சொல்லப்படுகிறது .தஞ்சையின் பொருள் குளிர்ந்த வயல்கள் நிறைந்த பகுதி " . 


நம் தமிழகம் வந்தாரை வாழ வைக்கும் என்னும் பழமொழியை 
உறுதி செய்யும் வகையில் நல்லாட்சி புரிந்து ,தஞ்சம் அடைதவற்கு 
அரணாக இருந்த ஆட்சியை வழங்கிய ஊரை  குறிக்கும் வகையிலும்
இப் பெயர் வைத்திருக்க கூடும் என்றும் சொல்லப்படுகிறது .
தஞ்சை பொருள் " தஞ்சம் அடைந்தவர்களுக்கு  அரணாக விளங்குவது ".


புராணக்கதைகள்  மூலமாகவே அறிவியலும் , மருத்துவத்தையும்  
சொன்ன தமிழன் தஞ்சையையும் விட்டுவைக்கவில்லை என்றே 
சொல்ல முடியும் .முற்காலத்தில் தஞ்சன் என்ற அரக்கன் 
இவ்விடத்தில்  மக்களைத் துன்புறுத்தி வந்ததாகவும்  அவர்களை 
காக்க அவ்வரக்கனை சிவன் வதம் செய்தார் என்றும் அதை 
நினைவு படுத்தும் வகையிலே இங்கு சிவன் தஞ்சபுரீசுவரர் என்னும் 
பெயரில் கோவில் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.