வெள்ளி, 17 ஏப்ரல், 2015

தஞ்சை கோட்டையை சுற்றி ஒரு பார்வை .......

 .

நம் தமிழன் கோட்டைகளும் ,கோவில்களும் இன்றும் ஏன் என்றும் உலக அதிசயங்கள் தான் .விடை தெரியாத புதிர்கள் அவை , இன்னும் கண்டுபிடிக்க முடியாத சுரங்க அமைப்புகள், கண்டறியப்படாத பொக்கிஷங்கள் ,புரியாத கட்டமைப்புகள் என பட்டியல் நீண்டு கொண்டு தான் போகிறது .

நாம் இப்பொழுது தஞ்சை கோட்டையை நோக்கி செல்வோம் .


ஆ )தஞ்சை கோட்டை :


வரலாறு சிறப்பு மிக்க கோட்டைகளுள் தஞ்சையும் ஒன்று .
இக் கோட்டையின் சிறப்புகள் பல நூல்களில் குறிப்பிட பட்டுள்ளது 

அவற்றில் சில :


திருமங்கயாழ்வார் பாடல்களில் 


" வம்புலான் சோலை மாமதில் தஞ்சை " என்றும் 

கருவூறார் திருவிசைப்பாவில் 


"மறிதிரை வடவாற் றிடுபுனல் மதிகில்வாழ் முதலை 

ஏற்றிநீர்க் கிடங்கில் இஞ்சிசூழு தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே "

வடவாற்று நீர் தஞ்சை கோட்டைக்கு வந்ததை கருவூர் தேவர் குறிப்பிடுகிறார். 



தஞ்சை நகரக் கோட்டை 530 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது .
இக் கோட்டையை கருடக்கொடி என்றும் அழைப்பர் ஏனெனில் இக் கோட்டையின் அமைப்பு கருடன் வடிவில் அமைக்கப்பட்டுள்ளத்தால் இப்பெயர் வழங்கப்படுகிறது .இக்கோட்டையில் யாருக்கும் பாம்பு கடித்தால்கூட மரணம் அடைவது இல்லை என்ற கதைகளும் சொல்லப்படுகிறது. மேலும் இக் கோட்டையை சுற்றி 8 காவலர் கோபுரங்கள் அமைந்துள்ளன .


 ராஜராஜ சோழன் தஞ்சை நகரை இரண்டாக  உள்ளாலை என்றும் 
city ) மற்றும் புறம்படி என்றும் (suburban) பிரித்து அழகான நகரமைப்பை வடிவமைத்தார் . உள்ளாலை கோட்டைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது .


தஞ்சைக் கோட்டை சிறிய கோட்டை ,பெரிய கோட்டை என இரண்டு 
பகுதிகளைக் கொண்டது . "சிறிய கோட்டை " என்பது  "பெரிய கோட்டைக்கு "காலத்தால் முந்தியது ஆகும் . இது பெரிய கோட்டையின் தென்மேற்கே அமைந்துள்ளது. இக் கோட்டை சிவகங்காகோட்டை
என்றும் அழைக்கபடுகிறது . 


இச்சிறிய கோட்டையில் தான் நம் புகழ்மிக்க ,உலக அறிவியல் இன்று வரை அதிசயத்து நிற்கும் ,விடை கண்டுபிடிக்க முடியாத அதிசங்கள் நிறைந்து இன்று வரை தமிழனை நிமிரிந்து நிற்க வைத்த நம் தஞ்சை பெரிய கோவில் அமைந்துள்ளது .


இக்கோட்டை செவ்வப்ப நாயக்கர் கட்டியது ,இதன் பரப்பளவு 36 ஏக்கர் ஆகும் .இக்கோட்டையில் வடக்கில்கிறிஸ்துவஆலயம், சிவகங்கை பூங்கா ,குளம் ஆகியவை அமைந்துள்ளது . 1779 இல் ஸ்வார்ட்ஸ் கட்டிய கிறிஸ்துவ ஆலயமும் ,1871 -72 இல் நகராட்சியால் சிவகங்கைப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது .இப் பூங்காவில் பலவகை விலங்குகள் மற்றும் பறவைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன . பூங்காவின் தெற்கே பெரிய கோவில் அமைந்துள்ளது .


சிறிய கோட்டையை அடுத்து தஞ்சை நகரைச் சுற்றிப் பெரிய கோட்டை அமைந்துள்ளது . இப்பெரிய கோட்டையின் வடக்கு ,மேற்கு மற்றும் வடகிழக்குப் பகுதியில் கோட்டையின் எஞ்சிய பகுதியும், அகழியும் இன்றும் காணப்படுகிறது .கோட்டையின் தெற்குப்பகுதி முற்றிலும் அழிந்துள்ளது .அகழி மட்டும் நீரால் நிரப்பப்பட்டுள்ளது .


தஞ்சை கோட்டை :

தஞ்சை கோட்டை வரைப்படம் :








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக