தஞ்சை பற்றி என்று சொல்லிவிட்டு இன்னும் தஞ்சை பெரியகோவில் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது இல்லையா. நம் தஞ்சை கோவிலில் நாம் பார்க்க போகும் முதல் இடம் ,தஞ்சை கோவிலின் வெளிப்புறத்தில் முதலில் கண்ணுக்கு தென்படடுகிற தஞ்சை பெரிய கோவில் சுற்றி அமைக்கப்பட்டுள்ள அகழி .
ஆ) தஞ்சை அகழி
தஞ்சை கோவில் அகழி பற்றி அறிவதற்கு முன் நம் தமிழன் கட்டி காத்த
நீர் நிலைகள் பற்றி தெரிந்துகொள்வோம் .
தமிழன் கட்டி காத்த 47 நீர்நிலைகள்
1) அகழி (Moat) - கோட்டையின் வெளிப்புறம் அமைக்கப்பட்ட நீர் அரண் .
2) அருவி (water fall)- மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது .
3) ஆழிக்கிணறு (well in sea-shore) -கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு
4) ஆறு (river)- பெருகி ஓடும் நதி .
5) இலஞ்சி (reservoir for drinking and other purposes )- பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்
6) உறை கிணறு (ring well) -மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு .
7) ஊருணி (Drinking water tank) -மக்கள் பருகும் நீர் நிலை .
8) ஊற்று (spring) - பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது .
9) ஏரி(irrigation tank) - வேளாண்மை பாசன நீர் தேக்கம் .
10) ஓடை (brook) -அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் -வாய்கால் வழி ஓடும் நீர் .
11) கட்டுக் கிணறு (built-in-well) - சரளை நிலத்தில் வெட்டி ,கல் ,செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு .
12) கடல் (sea) - சமுத்திரம்
13) கம்மாய் (irrigation tank)- பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கிய பெயர் .
14)கலிங்கு (sluice with many ventures ) -ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடையாமல் இருப்பதற்கு முன் எச்சரிகையாக கற்களால் உறுதியாக்கப்பட்டு பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு
15) கால் (channel) - நீரோடும் வழி .
16) கால்வாய்(supply channel to a tank) - ஏரி, குளம் ஊருணி இவற்றிற்கு நீர் ஊட்டும் வழி .
17) குட்டம் (large pond) - பெருங் குட்டை .
18) குட்டை (small pond) -சிறிய குட்டம் .மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை 19) குண்டம் (small pool) -சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை .
20)குண்டு (pool)-குளிபதற்கு கேற்ற ஒரு சிறு குளம் .
21) குமிழி (rock cut well)- நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு .
22)குமிழி ஊற்று(artesian fountain) -அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று .
23) குளம் (bathing tank)- ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப் பயன்படும் நீர் நிலை
24 ) கூவம் (abnormal well) -ஒரு ஒழுங்கில் அமையாதா கிணறு .
25) கூவல் (hollow)-ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம் .
26) வாளி (stream)- ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரம்பி மருகால்வழி அதிகம் நீர் வெளிச் செல்லுமாறு அமைத்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை .
27) கேணி(large well) - ஆழமும் ,அகலமும் உள்ள ஒரு பெருங்கிணறு
28) சிறை (reservoir) - தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை .
29) சுனை (mountain pool) - மலையிடத்து இயல்பாய் அமைந்த நீர் நிலை .
30) சேங்கை (tank with duck weed) - பாசிக்கொடி மண்டிய குளம் .
31) தடம் (beautifully constructed bathing tank) -அழகாக நாற்புறமும் கட்டப்பட்ட குளம் .
32) தளிக்குளம் (tank surrounding a temple) - கோவிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற நீர் நிலை .
33) தாங்கல் (irrigation tank) - இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும் .
34) திருக்குளம் (temple tank) - கோவிலின் அருகே அமைந்த நீரோடும் குளம்
35) தெப்பக்குளம் (temple tank with inside pathway along parapet wall ) - ஆளோடஉடன் கூடிய தெப்பம் சுற்றி வரும் குளம் .
36) தொடு கிணறு (dig well) - ஆற்றில் அவ்வப்பொழுது மணலைத்தொண்டி நீர் கொள்ளும் இடம் .
37) நடை கேணி (large well with steps on one side) - இறங்கி செல்லும் படிக்கட்டமைப்பு பெருங்கிணறு .
38)நீராவி(bigger tank center mantapam) - மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம் .ஆவி என்றும் கூறப்படும்.
39 ) பிள்ளக்கிணறு (well in middle of a tank) - குளம்,ஏரிக்கு நடுவில் அமைந்த கிணறு .
40) பொங்கு கிணறு (well with bubbling spring)- ஊர்ருக்கால் கொப்பளித்துக் கொண்டே இருக்கும் கிணறு .

41) பொய்கை (lake) -தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்து நீண்டதொரு நீர் நிலை .
42) மடு(deep place in a river)- ஆற்றின் இடையில் உள்ள அபாயமான பள்ளம் .
43) மடை (small sluice with single venture ) - ஒரு கண்ணே உள்ள சிறு மதகு .
44) மதகு (sluice with many ventures) - பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ள ,பல கண்ணுள்ள ஏரி
நீர் வெளிப்படும் மடை
45) மறு கால் (surplus water channel) - அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.
46) வலயம் (round tank) - வட்டமாய் அமைந்த குளம் .
47) வாய்க்கால் (small water course) - ஏரி முதலிய நீர் நிலைகள் .
இப்பொழுது அனைவருக்கும் கொஞ்சம் தலை சுற்றி இருக்கும்
அதனால் மீண்டும் நம் தஞ்சைக்கு செல்வோம்
அகழிகள் மன்னர்கள் வசித்த இடத்தை பாதுகாக்கவும் ,நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கவும் பயன்படுத்தபட்டன .
தஞ்சை கோவில் கி.பி 1010 -ம் ஆண்டு ராஜா ராஜா சோழனால் கட்டி முடிக்கப்பட்டது .கோவிலை சுற்றி 3 கி. மி தூரம் இந்த அகழி அமைந்துள்ளது .மேலும் நாம் முன் பார்த்த பெரிய கோட்டையை சுற்றியும் அகழி அதற்கு பின் வந்த நாயக்க மன்னர்களால் 400 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டுள்ளது .
இன்று வரை நம் தஞ்சை கோவில் நிமிர்ந்து நிற்க இந்த அகழியும் முக்கிய காரணம் ஏனெனில் அன்று இந்த அகழியில் முதலைகள் இருந்ததாகவும்
அவை அன்னியர்களிடம் இருந்து கோவிலை பாதுகாத்ததாகவும் கூறப்படுகிறது.
தஞ்சை கோவில் அகழி படங்கள் :

தஞ்சை அகழியின் நிலை இன்று :
சிறிய கோட்டை அகழி மதில் இடிந்து விழுந்த பகுதி :
சிறிய கோட்டை அகழி சில மாதங்கள் முன் இடிந்து விழுந்தது பின் இந்த பகுதி தற்பொழுது மாநகராட்சி இடம் இருந்து இந்திய தொல்பொருள் ஆராச்சி அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது .

Neer nilaiyangal Thani Posta pothu irrukalam, rare information
பதிலளிநீக்குhmm அகழி பத்தின information ku intro va erukattum nu nenachen my frnd .but nenga sonnathu correct than yennakum appidi thonuchi .thank you for your feedback .
நீக்கு